மோதியின் ஆதரவுடன் அடானி உலகின் 3ம் செல்வந்தர்

மோதியின் ஆதரவுடன் அடானி உலகின் 3ம் செல்வந்தர்

Bloomberg Billionaires Index கணிப்புப்படி இந்திய வர்த்தகரான அடானி (Gautam Adani) தற்போது உலகின் 3வது பெரிய செல்வந்தர் ஆகியுள்ளார். மிக குறுகிய காலத்தில் அடானி பெருமளவு செல்வத்தை சேகரிக்க அவர் கொண்டிருந்த இந்திய பிரதமர் மோதியின் நெருக்கம் பிரதான காரணம்.

2022ம் ஆண்டின் முதல் அரை ஆண்டு காலத்தில் மட்டும் அடானி $60 பில்லியன் மேலதிக சொத்தை பெற்றுள்ளார்.

அடானியிடம் தற்போது சுமார் $137 பில்லியன் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வகை செல்வந்தரின் பெருமளவு சொத்துக்கள் பங்கு சந்தை சொத்துக்களே. அதனால் இவர்களின் பெறுமதி அதிக அளவில் தளம்பும்.

உலகின் முதலாவது செல்வந்தராக $251 பில்லியன் சொத்து கொண்ட Elon Musk என்ற Tesla உரிமையாளரும், இரண்டாம் செல்வந்தராக $153 பில்லியன் சொத்து கொண்ட Jeff Bezos என்ற Amazon நிறுவனத்தின் உரிமையாளரும் உள்ளனர்.

அதேவேளை நீண்ட காலமாக உலகின் முதலாவது செல்வந்தராக இருந்த Microsoft நிறுவனத்தை ஆரம்பித்த $117 பில்லியன் சொத்து கொண்ட Bill Gates போன்றோர் தமது சொத்துக்களை நன்கொடையாக வழங்கி செல்வந்தர் வரிசையில் கீழ் நோக்கி செல்வதும் புதிய செல்வந்தர் மேலேற காரணமாகிறது. Bill Gate அண்மையில் $30 பில்லியன் சொத்தை Gates Foundation என்ற நிறுவனத்துக்கு வழங்கி உள்ளார்.

படிப்படியாக வளர்ந்த செல்வந்தரான முகேஷ் அம்பானியை அடானி குறைந்த காலத்தில் பின்தள்ளி செல்வந்தர் ஆகி உள்ளார். மோதி அரசு முதலீடுகள் செய்ய இருந்த துறைகளில் ‘உண்மையை அறிந்த’ அடானி முன்கூட்டியே அந்த துறைகளில் வர்த்தகங்களை ஆரம்பித்து இருந்தார்.

ஆனாலும் CreditSights என்ற அமைப்பு அடானியின் முதலீடுகள் ஆபத்து அதிகமானவை (deeply over-leveraged) என்று கூறியுள்ளது.