யுகிரேனில் மோதினாலும், விண்ணில் தொடரும் அமெரிக்க, ரஷ்ய உறவு

யுகிரேனில் மோதினாலும், விண்ணில் தொடரும் அமெரிக்க, ரஷ்ய உறவு

ரஷ்யாவினதும், அமெரிக்காவினதும் மறைமுக மோதலுக்கு யுக்கிரேனில் பெருமளவு உயிர்கள் பலியாகினாலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் தொடர்ந்தும் NASA-Roscosmos உறவு மூலம் விண்வெளியின் இணைந்து இயங்க இன்று வெள்ளி அறிவித்து உள்ளனர்.

இன்று கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய விண்வெளி வீரர்கள் அமெரிக்க ஏவுகலம் மூலமும், அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷ்ய Soyuz ஏவுகலம் மூலமும் International Space Station (ISS) என்ற ஆய்வு கூடத்துக்கு பயணிக்க முடியும்.

இந்த இணக்கம் இரண்டு நாடுகளின் நலனுக்காக செய்யப்பட்டதாம். யுக்ரேன், NATO, உலகநாடுகளின் நலம் இங்கு கணக்கில் எடுக்கப்படவில்லை.

இந்த உடன்படிக்கையின்படி வரும் செப்டம்பர் மாதம் Frank Rubio என்ற அமெரிக்க விண்வெளி வீரர் Sergey Prokopev, Dmitry Petelin ஆகிய ரஷ்ய வீரருடன் ரஷ்ய ஏவுகலம் மூலம் ISS பயணிப்பார். பின்னர் ரஷ்ய வீரரான Anna Kikina அமெரிக்க வீரர்களுடன் SpaceX கலத்தில் ISS செய்வர்.

ரஷ்யா சீனாவின் விண்வெளி ஆய்வில் இணைவதையும் அமெரிக்கா விரும்பவில்லை.