யுக்கிரேன் விமானத்தை ஈரான் சுட்டிருக்கலாம்?

Flight_PS752

புதன்கிழமை ஈரானின் தலைநகரில் இருந்து யுக்கிரேனின் தலைநகர் சென்ற யுக்கிரேனுக்கு சொந்தமான விமானத்தை (flight PS752) ஈரானின் ஏவுகணை ஒன்றே தவறுதலாக சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அமெரிக்காவும், கனடாவும் கருதுகின்றன. இந்த விமான விபத்தில் 63 கனடியர்கள் உட்பட 179 பேர் பலியாகி இருந்தனர்.
.
அமெரிக்காவின் தரவுகளே முதலில் இந்த விமானம் ஈரானின் ஏவுகணைக்கு பலியாகி இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு இருந்தது. அந்த கருத்தை அடிப்படியாக கொண்டே கனடிய பிரதமரும் மேற்படி விமானம் ஏவுகணைக்கு பலியாகி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
.
அமெரிக்க அவதானிப்பு இந்த விமானம் ஈரான் வசமுள்ள ரஷ்ய தயாரிப்பான Tor M-1 வகை ஏவுகணையால் சுடப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறது.
.
ஈரான் புதன்கிழமை ஈராக்கில் உள்ள படை தளங்களை தாக்கி சில மணித்தியாலங்களின் பின்னரே மேற்படி விமானம் வீழ்ந்துள்ளது.
.
மேற்படி விமான விமானி அபாய அறிவிப்புகள் எதையும் விபத்துக்கு முன் செய்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
.