யுக்கிரேன் விமானத்தை ஈரானே தவறுதலாக சுட்டது

Flight_PS752

புதன்கிழமை யுக்கிரேன் விமான சேவைக்கு (Ukraine International Airlines) சொந்தமான விமானத்தை (flight PS752) ஈரானிய இராணுவமே எதிரி விமானம் என்று கருதி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது என்று ஈரான் தொலைக்காட்சி கூறியுள்ளது.
.
கடந்த 3 ஆம் திகதி ஈரானின் ஜெனரல் Soleimani ஈராக்கில் பயணிக்கையில் அமெரிக்கா தனது ஏவுகணை மூலம் படுகொலை செய்தமையை பழிவாங்க ஈரான் சுமார் 20 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள இரண்டு தளங்கள் மீது ஏவியது. ஏவியபின் அமெரிக்கா திருப்பி தாக்கலாம் என்பதால் ஈரான் இராணுவம் உசார் நிலையிலும் இருந்தது.
.
அப்போதே மேற்படி பயணிகள் விமானம் ஈரானின் தளம் அருகே பறக்க முயன்றுள்ளது. அதை  எதிரியின் விமானம் என்று கருதி தவறுதலாக சுட்டதாக ஈரான் கூறுகிறது. உண்மையில் அந்த தளம் பயணிகள் விமான நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது.
.
ஈரான் அரசு தமது தவறுக்கு வருத்தத்தை தெரிவித்து, தாக்குதல் தொடர்பாக பூரண விசாரணனையும் செய்வதாக கூறியுள்ளது.
.
மேற்படி விமானம் ஈரானின் தலைநகரில் இருந்து யுக்கிரேன் தலைநகர் சென்று, பின் அங்கிருந்து கனடாவின் Toronto நகருக்கு செல்லவிருந்தது.
.