அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆடம்பர சீன பயணம் முடிவடைந்து, ரம்ப் தற்போது அமெரிக்கா நோக்கி பயணிக்கிறார். ஆனால் இவரின் சீன பயணம் குறிப்பிடக்கூடிய ஒப்பந்தங்கள் எதையும் செய்திருக்கவில்லை.
ரம்ப் தரப்பு சீனா 200 அமெரிக்க Boeing விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது, அமெரிக்க chip களை கொள்வனவு செய்யவுள்ளது, ஈரானை வழிக்கு கொண்டு வர இணங்கி உள்ளது என்றெல்லாம் கூறினாலும் சீனா இவ்வகை அறிவிப்புகள் எதையும் செய்யவில்லை. இணைந்த அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
NVIDIA, Tesla, Apple போன்ற பல அமெரிக்க நிறுவனங்களின் CEO கள் ரம்புடன் பெய்ஜிங் சென்று இருந்தாலும் அவர்களும் புதிய விற்பனைகள் எதையும் அறிவிக்கவில்லை.
இதற்கு முன் 2017ம் ஆண்டு ரம்ப் சீனா சென்று சீயுடன் உரையாடி இருந்தார். அதற்கு பின்னான 9 ஆண்டுகளில் சீனா மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத்தில் சீனா கணிசமான அளவு தன்னிறைவு அடைந்துள்ளது.
மறுபுறம் ரஷ்ய சனாதிபதி பூட்டின் 20ம் திகதி அளவில் பெய்ஜிங் சென்று சீயுடன் உரையாடவுள்ளார்.
