ரம்பின் சனாதிபதி பதவியை பறிக்க House தீர்மானம்

Trump

அமெரிக்க சனாதிபதி பதவியில் இருந்து ரம்பை விரட்ட அமெரிக்காவின் House (கீழ் அவை) இன்று தீர்மானித்து உள்ளது. இரண்டு Democratic உறுப்பினர்கள் தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களும் தமது கட்சி விருப்புக்கு ஏற்பவே வாக்களித்தனர். Democratic கட்சினர் பதவி பறிப்புக்கு ஆதரவாகவும், ரம்பின் Republican கட்சினர் எதிராகவும் வாக்களித்தனர்.
.
ரஷ்யாவுக்கு எதிராக போராடும் யுக்கிரனுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த இராணுவ உதவிகளை சுயநல நோக்கில் இடைநிறுத்தி அதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான முறையில் செயல்பட்டது (Article I), மேற்படி விசாரணைகளுக்கு இடராக செயல்பட்டது (Article II) ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளே ரம்ப் மீது இன்று சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆகும்.
.
இரண்டு குற்றங்களிலும் ரம்ப் குற்றவாளி என்றுள்ளது Democratic கட்சியை பெரும்பான்மையாக கொண்ட House. Article I குற்றச்சாட்டு 230 வாக்குகளை ஆதரவாகவும், 197 வாக்குகளை எதிராகவும் பெற்றது. Article II குற்றச்சாட்டு 229 வாக்குகளை ஆதரவாகவும், 198 வாக்குகளை எதிராவும் பெற்றது.
.
அமெரிக்க அரசியல் அமைப்புப்படி அமெரிக்க சனாதிபதியின் பதவி impeachment மூலம் பறிக்கப்படலாம். ஒரு சனாதிபதியின் பதவியை பறிக்க முதலில் House குற்றத்தை விசாரணை செய்யும். விசாரணையின் இறுதியில் House வாக்கெடுப்பு மூலம் குற்றச்சாட்டுக்களை உறுதி செய்யும்.House தீர்மானத்துக்கு சாதாரண பெரும்பான்மை வாக்குகள் (50% + 1) போதுமானதாகும். இன்று இடம்பெற்றது அதுவே.
.
பின்னர் இந்த தீர்மானங்கள் Senate (மேல் அவை) க்கு செல்லும். இந்த தீர்மானங்கள் Senate இல் வெற்றி பெற 2/3 பெரும்பான்மை (66.66%) வாக்குகள் தேவை. Senate ரம்பின் கட்சியான Republican கட்சியியை பெரும்பான்மையாக கொண்டது. அதனால் ரம்ப் இங்கே தப்பித்து கொள்வார்.
.
Senate லும் தீர்மானங்கள் வென்றால் சனாதிபதி பதவி பறிக்கப்படும். அவ்வாறு நிகழுமாயின் சட்டப்படி உபசனாதிபதி சனாதிபதி பதவியை ஏற்பார்.
.
இதுவரை 4 சனாதிபதிகள் மீது impeachment நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1868 ஆம் ஆண்டில் Andrew Johnson மீதான impeachment நடவடிக்கை Senate இல் தோல்வி அடைந்தது. 1974 ஆம் ஆண்டு Senate வாக்கெடுப்பில் தோல்வி அடைவேன் என்று கருதிய Nixon தானாகவே பதவியில் இருந்து விலகினார். 1998 ஆம் ஆண்டு Clinton மீதான நடவடிக்கையும் Senate இல் தோல்வி அடைந்தது.
.