ரம்பின் ஜெருசலேம் நகர்வும், எகிப்தின் நடிப்பும்

UN_Israel_Palestinian

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அமெரிக்காவின் இஸ்ரவேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்த முடிவு செய்திருந்தார். அதை கண்டித்து கடந்த டிசம்பர் 21ஆம் திகதி ஐ.நா. ஒரு கண்டன அறிக்கையை வாக்கெடுப்புக்கு விட்டிருந்தது. அந்த கண்டனம் 128 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டும் இருந்தது.
.
இந்த வாக்கெடுப்பை யெமன் (Yemen) ஐ.நா.வில் அறிமுகப்படுத்தி இருந்தது. எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை இணைந்து முன்மொழிந்திருந்தன.
.
ஆனால் தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ள இரகசியங்களின்படி ஐ.நா.வில் இந்த தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு முன்மொழிந்திருந்த எகிப்தின் (இராணுவ கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்த) சிசி அரசு, மறைவில் அதே தீர்மானத்துக்கு எதிராக செயல்பட்டு உள்ளது. இந்த உண்மைகளை தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ள கப்டன் Ashraf al-Kholi என்ற எகிப்து புலனாய்வு அதிகாரியின் ஒலி பதிவுகளில் அம்பலப்படுத்தி உள்ளன.
.
ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்ப்பது போல் செயல்பட்ட இந்த இராணுவ அதிகாரி, எகிப்தின் பல அரசு சார்பு தொலைக்காட்சி கதையளப்பாளர்களை (talk show) அழைத்து அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக பரப்புரை செய்யும்படி கூறியுள்ளார்.
.
“We, like all our Arab brothers, are denouncing this matter” என்று கூறிய Kholi “After that, this thing will become a reality. Palestinians can’t resist and we don’t want go to war.” என்றும் கூறியுள்ளார். அத்துடன் இன்னோர் பாலத்தீனர் புரட்சி (intifada) எகிப்தின் நலனுக்கும் பயன் அற்றது என்றும் கூறியுள்ளார்.
.
Azmi Megahed, Mofid Fawzy, Saeed Hassaseen ஆகிய தொலைக்காட்சி கதையளப்போர் Kholi என்ற இராணுவ புலனாய்வு அதிகாரியின் பரப்புரையை நன்கு பரப்பியும் உள்ளார். ஆனால் வெளிநாட்டு பத்திரிகையாளர் இவர்களை தொடர்பு கொண்டபோது இவர்கள் ஒளிந்துள்ளனர்.
.

Megahed என்பவருடன் உரையாடும்போது “You also will say that Tamim and Qatar have secret ties to Israel” என்றும் கூறியுள்ளார் Captain Kholi.

அப்போது “Obvious ties,” என்று கூறிய Megahed “My pleasure. My pleasure. I will include it in the next episode, God willing.” என்றுமுள்ளார். உண்மையில் எகிப்தே இஸ்ரவேலுடன் உறவை கொண்டுள்ளது.

.
தற்காலங்களில் ஐரோப்பிய வெள்ளையர் பாலத்தீனர் மீது கொண்டுள்ள அனுதாபத்தின் சிறு பங்கு அனுதாபத்தையும் அவர்களின் சகோதர இஸ்லாமியர் கொண்டிருக்கவில்லை.
.