அமெரிக்க சனாதிபதி ரம்பின் தலை பதித்த $1 நாணயம் 2026ம் ஆண்டு வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு அமெரிக்கா பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொண்டாட அமெரிக்க காங்கிரஸ் 2020ம் ஆண்டு புதிய நாணயம் ஒன்றுக்கு கட்டளை இட்டு இருந்தது.
அந்த கட்டளைக்கு ஏற்ப புதிய நாணயம் ஒன்றை தயாரிக்க அமெரிக்க திறைசேரி ஆவண செய்யும்போது ஆட்சிக்கு வந்த ரம்ப் தனது தலையை அந்த நாணயத்தில் புகுத்த முனைகிறார்.
தற்போது வரைந்து முன்வைக்கப்பட்ட $1 நாணயத்தில் ஒரு பக்கம் ரம்பின் தலையையும், 1776-2026 என்ற ஆண்டு பதிவையும் கொண்டுள்ளது. மறு புறத்தில் ரம்ப் கையை உயர்த்தி “FIGHT FIGHT FIGHT” என்று கூறுவது பதியப்பட்டுள்ளது.
இந்த நாணயம் இதுவரை தயாரிப்புக்கு சட்டப்படி தெரிவு செய்யப்படவில்லை.
பொதுவாக மரணித்த தலைவர்களின் படங்களே நாணயங்களில் பதியப்படும். ஆனால் மகிந்த போன்றோரின் தலைகள் உயிருடன் இருக்கையிலேயே பதியப்பட்டு, பின் உயிருடன் இருக்கையிலேயே மறைந்தும் உள்ளன.