இன்று திங்கள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அவரின் Mar-a-Lago நிலையம் சென்ற இஸ்ரேல் பிரதமருடன் காசா யுத்த நிறுத்தம் தொடர்பாக பிரதான பேச்சு ஒன்றை செய்திருந்தார். ஆனால் பேச்சின் முடிவில் முன்னேற்றமான அறிவிப்பு எதையும் இருவரும் செய்திருக்கவில்லை.
தம்முள் 5 முட்டுக்கட்டையான விசயங்கள் இருந்ததாகவும், அவற்றில் மூன்றை தாம் முதல் 5 நிமிடங்களில் தீர்த்து உள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார். ஆனால் அவை எவை என்ற விபரங்கள் எதையும் ரம்ப் வெளியிடவில்லை.
இறுதியில் பேச்சுக்கு வந்த காரணத்தை மறந்து இருவரும் ஆளை ஆள் புகழ ஆரம்பித்தனர். ரம்புக்கு புதியதோர் பதக்கத்தை வழங்க இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் கூறினார். அந்த மகிழ்ச்சியில் ரம்ப் உருகிப்போனார்.
ஆனாலும் West Bank விசயத்தில் தான் இஸ்ரேல் பிரதமருடன் 100% உடன்படவில்லை என்று பின்னர் ரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு முன் Mar-a-Lago சென்ற யூக்கிறேன் சனாதிபதி சேலன்ஸ்கியுடன் ரம்ப் செய்த பேச்சும் திடமான அறிவிப்பு எதுவும் இன்றியே முடிந்திருந்தது. சேலன்ஸ்கிக்கு பின் ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டினுடடும் உரையாடி இருந்தார்.
இந்த இரண்டு பேச்சுகளும் ரம்பின் பெரும் கைவரிசையாக அறிவிக்கப்பட்டாலும் இறுதியில் பயன் எதையும் அளித்திருக்கவில்லை.
