ரம்பின் புதிய இழப்பு John Kelly

JohnKelly

அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் ஆட்சியில் இருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட அதிகாரிகளின் வரிசையில் இணையவுள்ளார் தற்போது White House Chief of Staff பதவியில் உள்ள John Kelly. John Kelly இந்த மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
.
ரம்ப் அரசுக்குள் குழப்பங்கள் உருவானபோது, அவற்றை கடுப்பாட்டுள் கொண்டுவரும் நோக்கிலேயே முன்னாள் இராணுவ ஜெனரல் John Kelly இந்த பதவிக்கு அமர்த்தப்பட்டார். ஆனால் அவராலேயே தொடர்ந்தும் செயல்பட முடியாது இருந்துள்ளது.
.
வழமைக்கு மாறாக அதிக அளவு உயர் அதிகாரிகள் ரம்ப்  அரசில் இருந்து குறுகிய காலங்களுள் விலகி உள்ளனர் அல்லது விலக்கப்பட்டு உள்ளனர். அதிகாரிகளுள் சிலர்:
.
Matthew Whitaker – சுமார் இரண்டு மாதங்கள் மட்டும் Attorney General ஆக பதவி வகித்தவர்.
.
Jeff Session – இவர் ரம்பின் Attorney General ஆக பதவி வகிக்கும் பொழுதே ரம்ப் இவர் மீது அவதூறுகள் கூறியிருந்தார்.
.
Nikki Haley – அமெரிக்காவின் ஐ. நா.வுக்கான தூதுவர், இந்த மாத இறுதியில் விலகுகிறார்.
.
Don MvGahn – வெள்ளைமாளிகை சட்டத்தரணி.
.
H. R. McMaster – தேசிய பாதுகாப்பு செயலாளர். இவர் ஒரு முன்னாள் லெப். ஜெனரல்.
.
Rex Tillerson – Secretary of State. இவரை பதவி நீக்கிய ரம்ப்  பின்னர் இவரை “dump as a rock”, “lazy as hell” என்றெல்லாம் வசைபாடி இருந்தார். இவர் முன்னர் ExxonMobil எண்ணெய்வள நிறுவனத்தின் chairman மற்றும் CEO பதவிகளை வகித்தவர்.
.
Stephen Bannon – இவர் ரம்பின் chief strategist ஆக பதவி வகித்தவர்.
.
Anthony Scaramucci – மொத்தம் 10 நாட்கள் மட்டும் வெள்ளைமாளிகையின் communication director ஆக பதவி வகித்தவர்.
.
Sean Spicer – வெள்ளைமாளிகை press secretary
.
Michael Flynn – தேசிய பாதுகாப்பு செயலாளர். இவர், ஒரு ஓய்வு பெற்ற அமெரிக்க லெப். ஜெனரல், ரஷ்யா விவகாரம் தொடர்பாக விரைவில் சிறை செல்லவுள்ளார்.
.
Sally Yates – இடைக்கால Attorney General ஆக பதவி வகித்தவர்.

.