ரம்பின் வரிகளை தடை செய்கிறது உயர் நீதிமன்றம் 

ரம்பின் வரிகளை தடை செய்கிறது உயர் நீதிமன்றம் 

International Emergency Economic Powers Act (IEEPA) என்ற 1977ம் ஆண்டு சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்க சனாதிபதி ரம்ப் கடந்த ஆண்டு நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரிகள் (tariffs) சட்டத்துக்கு முரணானது என்று அமெரிக்க Supreme Court வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறியுள்ளது.

மொத்தம் 9 நீதிபதிகளில் 6 நீதிபதிகள் ரம்பின் வரிகளுக்கு எதிராக தீர்ப்பு கூறியமையால் கடும் விசனம் கொண்டுள்ளார் ரம்ப். குறிப்பாக ரம்பால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளான Gorsuch, Barrett ஆகிய இருவரும் ரம்புக்கு எதிராக தீர்ப்பு கூறியமை ரம்பை மேலும் விசனம் கொள்ள வைத்துள்ளது.

மேற்படி தீர்ப்பால் விசனம் கொண்ட ரம்ப் அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% இறக்குமதி வரி ஒன்றை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இந்த வரிக்கு ரம்ப் இதுவரை பயன்படுத்தாத Section 122 ஐ பயன்படுத்தி உள்ளார். சட்டப்படி இவ்வகை வரிக்கு அதிகூடிய கால எல்லை 150 தினங்கள் மட்டுமே.

ஏற்கனவே அறவிடப்பட்ட வரிகளின் தொகை சுமார் $130 பில்லியன் என்றும் இந்த பணமும் மக்களுக்கு திருப்பி வழங்கப்படும் நிலை தோன்றலாம்.