நேற்று வியாழன் தென் கொரிய விமான நிலையத்தில் இடம்பெற்ற ரம்ப்-சீ சந்திப்பு சீனா ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியாத நாடாக மறியதை காட்டியுள்ளது.
இந்த சந்திப்பை ரம்ப் ஒரு பெரு வெற்றியாக கூறினாலும், சீனா இந்த சந்திப்பை ஒரு சாதாரண நிகழ்வாகவே காண்பிக்கிறது. இந்த சந்திப்பில் திடமான தீர்வுகள் எதுவும் ஏற்படவில்லை. சீனா fentanyl க்கான மூல இரசாயணங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை 10% ஆல் குறைக்கவும் மட்டுமே இணங்கின.
மலேசியாவுடன் ரம்ப் critical minerals உடன்படிக்கை செய்தாலும், ஜப்பான் அமெரிக்காவில் $550 பில்லியன் முதலிடவும், அமெரிக்க 250 ஆண்டு நிறைவுக்கு 250 cherry மரங்களை வழங்க முன்வந்தாலும், தென் கொரியா 21 பிரங்கி குண்டு அனுவகுப்பை செய்தாலும் சீனாவின் சீ ரம்பை விமான நிலையத்து இராணுவ கட்டிடம் ஒன்றிலேயே சந்தித்தார்.
ஆனால் ரம்ப் இந்த சந்திப்புக்கு 0 முதல் 10 வரையான புள்ளிகளை கொண்ட அளவீட்டில் தான் 12 புள்ளிகள் வழங்குவதாக புகழ்ந்துள்ளார். அவர் தனது கணிப்பில் இந்த சந்திப்பதை “on a scale from zero to 10, with 10 being the best, I would say the meeting was a 12.” என்றார்.
ரஷ்யாவை அமெரிக்கா இராணுவ முனையில் மிரட்ட முடியாது என்றாலும் தாராளமாக பொருளாதார முனையில் மிரட்டலாம். ஆனால் சீனாவை அமெரிக்கா இராணுவ மற்றும் பொருளாதார முனைகளில் மிரட்ட முடியாது என்ற நிலை உருவாகியமை தற்போது தெரிகிறது. சீன பொருளாதாரம் கணிசமான அளவில் தன்னை அமெரிக்க பொருளாதாரத்தில் இருந்து விடுவிக்க கற்றுக்கொண்டுள்ளது.
