ரம்ப் ஆசியா பயணம், பண்பை பேணுவாரா?

Trump

அமெரிக்க ஜனாதிபதி ஆசியாவுக்கு 12-நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். வரும் ஞாயிறு 5 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்தின் போது ரம்ப் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்வார்.
.
அமெரிக்காவில் உள்ளபோது எம்போதுமே கீழ்தரமாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசும் ரம்ப் இந்த 12 நாட்களிலும் எவ்வாறு எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் H. R. McMaster பத்திரிகையாளர் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறும்போது ரம்ப் தனது விருப்பம்போல் கதைப்பார் (“will use whatever language he wants to use) என்றுள்ளார். அதாவது ரம்பின் பேச்சுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றுள்ளார் மறைமுகமாக.
.
ரம்பும் “சீனாவில் கால் வைக்க 4 நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் நான் எவரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை (I don’t want to embarrass anybody four days before I land in China” என்றுள்ளார்.
.
இந்த 12 நாட்களிலும் ரம்ப் பண்பை பேணுவாராயின் அதுவே அவரின் ஆட்சி காலத்தில் பண்பாக செயல்பட்ட தொடர்ச்சியான 12 நாட்களாக இருக்கும்.
.