கடும் எதிர்ப்பு காரணமாக அமெரிக்க சனாதிபதி ரம்பின் குடும்ப நிறுவனத்துக்கு FIFA உதைபந்தாட்ட போட்டிகளை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
FIFA அதிபர் Gianni Infantino இந்த தீர்மானத்தை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அவர் மேற்படி தீர்மான அறிவிப்பில் “this proposal will not proceed” என்று கூறியுள்ளார்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் உதைபந்தாட்ட அமைப்பான UEFA தொடுத்த எதிர்ப்பே திட்டத்தை கைவிட பிரதான காரணம் ஆயிற்று.
இதனால் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் மீது ரம்ப் கொண்டுள்ள காழ்ப்பு மேலும் உக்கிரம் அடையும்.
திட்டம் கைவிடப்பட முன், வெள்ளி காலை, Gianni Infantino வின் முதன்மை ஆலோசகர் Carlos Cordeiro மேற்படி திட்டத்துக்கு எதிர்ப்பு கூறி பதவி விலகி இருந்தார்.
