ரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் முயற்சி

ரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் முயற்சி

நியூ யார்க் நேரப்படி சனி இரவு இடம்பெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்து (White House Correspondents’ Dinner) நிகழ்வுக்கு சென்றிருந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. ரம்ப் காயப்படவில்லை என்றும் பாதுகாப்பாக உள்ளார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரம்ப் மட்டுமன்றி உதவி சனாதிபதி JD Vance உட்பட பல ரம்ப் ஆட்சி அதிகாரிகள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Washington Hilton என்ற இந்த Hotel லிலேயே முன்னாள் சனாதிபதி Ronald Reagan மீதும் 1981ம் ஆண்டு, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றது. அதில் ரேகன் காயமடைந்திருந்தார்.

விருந்து நிகழ்ச்சி மீண்டும் தொடரப்படும் என்றும் கூறப்படுகிறது. ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்புகிறார்.