ரம்ப் மேலும் $300 பில்லியனுக்கு 10% வரி

Trump

சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் மேலும் $300 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா புதிய 10% இறக்குமதி வரியை (tariff) அறவிடவுள்ளதாக ரம்ப்  இன்று வியாழன் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தக போரின் இன்னோர் அங்கமே இது.
.
மேற்படி புதிய வரிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது.
.
சில நாட்களுக்கு முன் சீனாவின் ஷாங்காய் நகரில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தக பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததையே ரம்பின் இந்த புதிய வரிகள் எடுத்து காட்டுகின்றன.
.
இந்த செய்தியை அறிந்த அமெரிக்க பங்கு சந்தைகள் மதியத்தின் பின் பெரும் வீழ்ச்சியை அடைந்தன.
.
ஏற்கனவே $250 பில்லியன் பெறுமதியான சீன பொருட்களுக்கு ரம்ப் அரசு 25% மேலதிக இறக்குமதி வரியை அறவிடுகிறது.

.