ரம்ப் வரி திட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

Trump

அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் நடைமுறை செய்யவுள்ள புதிய வரி திட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டாக அமெரிக்காவின் Treasury Secretary Stephen Munchin என்பவருக்கும், அமெரிக்காவின் Republican கட்சி உயர் உறுப்பினர்களுக்கும் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர்.
.
இந்த கடிதத்தில் அமெரிக்க கூட்டுத்தாபனங்களுக்கான அமெரிக்காவின் புதிய வரிகள் WTO முறைமைகளுக்கு முரணானது என்று கூறப்பட்டுள்ளது.
.
ஐரோப்பிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று திட்டமிடப்பட்ட excise வாரியாகும். Excise வரி விதிப்படி, அமெரிக்க நிறுவனம் ஒன்று அதன் அந்நியநாட்டு கிளை ஒன்றில் இருந்து அல்லது அந்நிய நாட்டு கூட்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து செய்யும் கொள்வனவுக்கு அமெரிக்காவில் 20% மேலதிக வரி செலுத்தல் வேண்டும். ஆனால் உள்நாட்டில் செய்யப்படும் கொள்வனவுகளுக்கு இந்த வரி இல்லை. அது WTO முறைமைக்கு முரணானது. இந்த பொருட்கள் வெளிநாடு ஒன்றில் ஏற்கனவே வரி செலுத்தி உள்ளமையால், அமெரிக்காவின் excise வரி இரட்டை வாரியாக கருதப்படும் (double taxation)
.

தற்போதைய அமெரிக்காவில் கூட்டுத்தாபன வருமான வரி சுமார் 39% ஆகும். ஜேர்மனியில் இது 30% ஆகவும், பிரான்ஸில் இது 34% ஆகவும் உள்ளன. ரம்பின் புதிய வரி திட்டப்படி அமெரிக்காவின் கூட்டுத்தாபன வருமான வரி 21% ஆக குறையும்.

.
ரம்பின் புதிய வரி அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் ஒரு வர்த்தக போரை (trade war) உருவாக்கலாம்.
.