ரம்ப் வழி போகும் அஸ்ரேலியாவை சீனா தண்டிக்கிறது?

China_Australia

அஸ்ரேலியாவின் நான்கு இறைச்சி தயாரிப்பு நிறுவனங்கள் மீது அண்மையில் சீனா தடை விதித்து உள்ளது. அத்துடன் மற்றைய அஸ்ரேலிய இறைச்சி இறக்குமதிகளுக்கும் சீனா புதிதாக 80% இறக்குமதி வரியையும் நடைமுறை செய்துள்ளது. சீனாவின் அஸ்ரேலியா மீதான அண்மைக்கால கடும்போக்கு அஸ்ரேலியா அமெரிக்க சனாதிபதி ரம்ப் வழி செல்வதற்கு வழங்கும் தண்டனைகள் என்று கருதப்படுகிறது.
.
அஸ்ரேலியாவின் இறைச்சிக்கு மட்டுமன்றி, அவர்களின் barley க்கும் சீனா புதிதாக 80% வரி நடைமுறை செய்துள்ளது.
.
நீண்ட காலமாக அஸ்ரேலியாசுதந்திரமான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை கொண்டிருந்தது. அதனால் அது சீனாவுடன் பாரிய பொருளாதார உறவை கொண்டிருந்தது. அஸ்ரேலியாவின் சுமார் 33% ஏற்றுமதிகளை சீனாவே கொள்வனவு செய்கிறது. 2018-2019 ஆண்டு காலப்பகுதியில் சீனாவுக்கான ஏற்றுமதி அஸ்ரேலியாவுக்கு US$ 99 பில்லியனை வருமானத்தை வழங்கி உள்ளது.
.
ஆனால் 2016 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் அஸ்ரேலியவின் சீனாவுடனான உறவை துண்டிக்க முனைகிறார். ரம்பின் அழுத்தங்கள் காரணமாகவே அஸ்ரேலியா சீனாவின் Huawei நிறுவனத்தின் செயல்பாடுகளை அஸ்ரேலியாவில் கட்டுப்படுத்தி உள்ளது. கரோனா வரைஸ் விசயத்திலும் அஸ்ரேலியா ரம்பின் அழுத்தங்கள் காரணமாக அமெரிக்காவுடன் இணைந்த கருத்துக்களை கூறி வருகிறது.
.