ரம்ப் “H-1B” விசாவை முடக்க, சீனா “K” விசா அறிமுகம் 

ரம்ப் “H-1B” விசாவை முடக்க, சீனா “K” விசா அறிமுகம் 

அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்கா இதுவரை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு இலகுவில் வழங்கி வந்த H-1B விசாவுக்கு $100,000 விசா கட்டணம் அறிவித்து அந்த விசாவை முடக்க, சீனா STEM (Science, Technology, Engineering, and Mathematics) வல்லுனர்களுக்கு புதிதாக K விசாவை அறிமுகம் செய்துள்ளது.

புதன்கிழமை நடைமுறைக்கு வந்த சீனாவின் K விசாவின் முழுமையான விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. H-1B விசா இறுதியில் அமெரிக்க குடியுரிமையை அடைய உதவுவதுபோல் சீன K விசா சீன குடியுரிமையை அடைய உதவாது அமையலாம்.

H-1B விசாவை அதிகம் பெறும் இந்தியரை K விசா குழப்பத்தில் வைக்கலாம். எதிரி நாடான சீனாவின் வளர்ச்சிக்கு இந்திய வல்லுனர் உதவுவதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, சீனாவில் பெறக்கூடிய பெரும் உழைப்பை இழக்கலாமா என்று கேள்வி மறு புறம் இருக்கும்.

சீனாவின் புதிய K விசா அறிவிப்பால் சீன வல்லுனர்கள் விசனம் கொண்டுள்ளனர். இந்தியாவில் தமக்கு கிடையாத பயனை ஏன் சீனா இந்தியருக்கு வழங்கவேண்டும் என்பதே அவர்களின் கேள்வி.

சீனாவில் சீன மொழியே பயன்பாட்டு மொழியாக இருக்கையில், அதுவும் ஆங்கில மொழி கொண்டோருக்கு இடராக இருக்கும்.