ரஷ்யாவின் தலையீட்டால் பலப்பட்ட அசாத் ஆட்சி

Syria

சிரியாவில் சவுதி மற்றும் மேற்கு சார்பு ஆயுதக்குழுக்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட விமான தாக்குதல் நடவடிக்கைகள் அசாத் (Bashar al-Assad) தலைமயிலான அரசை பலப்படுத்திவிட்டது என்கிறது அமெரிக்க உளவுப்படை.
.
இன்று செவ்வாய்கிழமை அமெரிக்காவின் லெப். ஜெனரல் Vincent Stewart ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் அந்நாட்டு யுத்த கணிப்புக்களை முற்றாக மாற்றிவிட்டது என்றுள்ளார். அத்துடன் அசாத் தரப்பு ஆறு மாதங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது மிகவும் பலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
.
Free Syrian Army என்ற சவுதி மற்றும் அமெரிக்க ஆதரவு குழு தாம் கட்டுப்பாடில் வைத்திருந்த Alepp என்ற நகரையும் இழக்கும் நிலையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. சிரியாவுக்கான எந்தவொரு தீர்விலும் அசாத் பங்கு கொள்ள முடியாது என்ற அமெரிக்காவின் பிடிவாத கொள்கையும் இனி நடைமுறை சாத்தியம் அற்றதாக மாறிவருகிறது. ரஷ்யாவின் இணக்கம் இன்றி மேற்கு எந்தெவொரு தீர்வையும் அங்கு நடைமுறைப்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.
.

அதேவேளை IS மீதான இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கு தொடரவேண்டியுள்ளது.
.