ரஷ்ய அமைச்சரவையை கலைத்தார் பூட்டின்

Putin

நேற்று புதன் ரஷ்ய அமைச்சரவையை சனாதிபதி பூட்டின் கலைத்து உள்ளார். பூட்டினின் இந்த திடீர் நகர்வுக்கு கரணம் அறியாது தவிக்கிறது உலகம். தற்போதைய அரசியல் சாசனப்படி 2024 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய பூட்டின் அதன் பின்னரும் பதவியில் இருக்க வழி செய்கிறார் என்று கருதுகின்றன மேற்கு நாடுகள்.
.
நேற்று புதன்கிழமை பூட்டின் தனது அறிவிப்பை செய்த உடன் பூட்டினின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பிரதமர் Dmitri Medvedev வும் தனது அமைச்சரவையுடன் பதவி விலகி உள்ளார்.
.
தான் ரஷ்யாவின் அரசியல் சாசனத்தை முற்றாக மாற்றி அமைக்கவுள்ளதாக பூட்டின் கூறி உள்ளார். ஆனால் மேற்கொண்ட விபரங்களை அவர் இதுவரை வெளியிடவில்லை.
.
பழைய பிரதமர் பதவி விலகிய உடன், பூட்டின் பெரிதும் பிரபலம் இல்லாத ஆனால் மக்களின் நன்மதிப்பு பெற்ற Mikhail Mishustin என்பவரை புதிய பிரதமராக நியமித்து உள்ளார். பூட்டினின் புதிய பிரதமரை பாராளுமன்றமும் உடனே அங்கீகரித்து உள்ளது.
.
பூட்டின் கடந்த 20 வருடங்களாக ரஷ்ய அரசியலில் முக்கிய பங்கு கொண்டுள்ளார்.
.