ரஷ்ய நகரில் அதிகரித்த அணு கதிர்வீச்சு

Russia

கடந்த வியாழன் ரஷ்யாவின் விஞ்ஞானிகள் புதிய வகை, சிறிய அளவிலான அணு ஏவுகணை ஒன்றை சோதனை செய்த போது அந்த ஏவுகணை வெடித்து 5 விஞ்ஞானிகளும் பலியாகி இருந்தனர். அந்த வெடிப்பு உருவாக்கிய அணு கதிர் வீச்சு தற்போது சுமார் 30 km தொலைவில் உள்ள Severodvinsk என்ற நகரை தாக்க ஆரம்பித்து உள்ளது.
.
Severodvinsk என்ற நகரில் தற்போது வளமையிலும் 16 மடங்கு அதிகரித்த அணு வீச்சு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நகரத்து மக்கள் வெளி இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.
.
மேற்படி சோதனையை விஞ்ஞானிகள் கடலில் செய்தனர் என்றும் அப்போது நிகழ்ந்த வெடிப்பால் அவர்கள் கடலுள் வீசப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
.
இந்த விபத்தில் பலியான விஞ்ஞானிகள் ரஷ்யாவின் அதி உயர் பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டு உள்ளனர்.

.