ரஷ்ய விமானத்தை இலங்கை முடக்கியது

ரஷ்ய விமானத்தை இலங்கை முடக்கியது

ரஷ்யாவின் Aeroflot விமான சேவையின் பயணிகள் விமானம் ஒன்றை இலங்கை முடக்கி உள்ளது. Colombo Commercial High Court நீதிபதி Harsha Sethunga வின் உத்தரவுப்படியே விமானம் முடக்கப்பட்டு உள்ளது.

சுமார் 200 பயணிகளை கொள்ளக்கூடிய இந்த Airbus A330 வகை விமானம் வியாழன் காலை கொழுப்பு வந்திருந்தது. அது வெள்ளி அதிகாலை மீண்டும் மாஸ்கோ பறக்க இருந்த நிலையில் கட்டுநாயக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை தடுத்து வைத்ததற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பெரும் தடைகளை விதித்து உள்ளன. இந்த விமான முடக்கலுக்கு மேற்கின் தடைகள் காரணமா அல்லது வேறு வர்த்தக முரண்பாடுகள் காரணமா என்று இதுவரை குறிப்பிடப்படவில்லை.

ரஷ்யா யூக்கிரைன் மீது தாக்குதலை ஆரம்பித்த காலத்தில் Aeroflot கொழும்புக்கான விமான சேவையை நிறுத்தி இருந்தாலும், ஏப்ரல் மாதம் 8ம் திகதி சேவையை மீண்டும் ஆரம்பித்து இருந்தது.