ராஜபக்ச ஆட்சி உண்மைகளை மறைத்து என்கிறார் ரணில்

ராஜபக்ச ஆட்சி உண்மைகளை மறைத்து என்கிறார் ரணில்

அமெரிக்காவின் CNN தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய உரையாடல் ஒன்றில் முன்னர் இலங்கையை ஆண்ட ராஜபக்ச ஆட்சி இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிகளை நீண்ட காலமாக மறைத்து உள்ளது (covering up facts) என்று கூறியுள்ளார் ரணில் விக்ரமசிங்க.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ரணில் இம்முறை ஆட்சியை கைப்பற்றிய பின்னர் வழங்கிய முதல் உரையாடல் இதுவே.

இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்ந்த இந்த உரையாடலில் 2024ம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் நலமாகிவிடும் என்றும் ரணில் கூறியுள்ளார். ஆனால் இவாறு என்று அவர் கூறவில்லை.

கோட்டாபய மாலைதீவு சென்ற பின்னரும், சிங்கப்பூர் சென்ற பின்னரும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தற்போது கோட்டாபய எங்கு உள்ளார் என்று தெரியாது என்றும் ரணில் கூறியுள்ளார்.

எரிக்கப்பட்ட தனது வீட்டில் இருந்த பெறுமதி கூடிய 4,000 புத்தகங்களும், அவற்றுடன் சுமார் 125 ஆண்டு கால பழைய piano ஒன்றும் எரிந்துள்ளதாக ரணில் கூறியுள்ளார்.

CNN ரணில் மீது கடுமையான கேள்விகள் எதையும் கேட்டிருக்கவில்லை. குறிப்பாக போராட்டக்காரர் கேட்டபடி ராஜபக்ச குடும்பம் மீது ஊழல் விசாரணைகள் எதுவும் செய்யவுள்ளாரா என்று கேட்க்கப்படவில்லை. ரணிலே தற்போது அமெரிக்காவின் விருப்பது உரிய இலங்கை அரசியவாதி.