ரொரன்டோ $22 மில்லியன் தங்க திருட்டில் 6 பேர் கைது

ரொரன்டோ $22 மில்லியன் தங்க திருட்டில் 6 பேர் கைது

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள Pearson சர்வதேச விமான நிலைய cargo பிரிவிலிருந்து C$ 22 மில்லியன் பெறுமதியான தங்க கட்டிகளும், பணமும் திருடப்பட்டு இருந்தன. அது தொடர்பாக விசாரணைகளை செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இருந்து Air Canada விமானத்தில் வந்திருந்த இந்த தங்கம் உள்வீட்டு உதவியுடனேயே திருடப்பட்டுள்ளது என்பதை போலீசார் விரைவில் அறிந்துள்ளனர். திருட்டுக்கு சமர்ப்பித்த கணினி print ஒன்றே உண்மையை துலக்கி உள்ளது.

நாளடைவில் printer, copier போன்ற  உபகரணங்களில் கீறல்கள், மாசுக்கள் ஏற்படுவதுண்டு. அவற்றில் சில அவை print செய்யும் பிரதிகளிலும் ஒரே இடத்தில், ஒரே மாதிரி படியும்.

மேற்படி திருட்டுக்கு பாதுகாப்பான Air Canada cargo கூடத்திற்கு செல்ல பழைய கடல் உணவு cargo ஒன்றுக்கான ஆவணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கையளிக்கப்பட்ட cargo ஒன்றுக்கான ஆவணம் மீண்டும் பயன்படுத்தப்பட்டமை போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அத்துடன் இரண்டாம் தடவை சமர்ப்பிக்கப்பட்ட கடல் உணவுக்கான ஆவணம் விமான நிலையத்திலேயே print செய்யப்பட்டமையும் திருட்டு உள்வீட்டு வேலை என்று அறிய வைத்துள்ளது.

சந்தேக நபர்களில் 2 பேர் Air Canada ஊழியர். திருடின் சாரதி அமெரிக்காவின் Pennsylvania நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களின் பெயர்கள் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. ஆனால் பொலிசார் விசாரணைக்கு “Project 24Karat” என்று பெயர் வைத்தது இதில் தெற்கு ஆசியர் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது.