லிபியாவில் தான் தவறு என்கிறார் ஒபாமா

Libya

அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒபாமாவிடம் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டபோது லிபியாவிலேயே தான் பெரிய தவறு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது லிபியாவின் கடாபியை 2011 ஆம் ஆண்டில் அழித்த தாம் அதற்கு பின்னரான அந்நாட்டின் நிர்வாகத்தை தம் கருத்தில் கொண்டிருக்கவில்லை என்றுள்ளார்.
.
கடாபியின் காலத்தில் ஓரளவு சட்டம் ஒழுங்குடன் இருந்த லிபியா இன்று உடைந்து பலவேறு குழுக்களால் ஆளப்பட்டு வருகிறது. அந்த குழப்பத்தை பயன்படுத்தி IS அங்கு பெருமளவில் வளர்ந்துள்ளது.
.
சதாமையும் அவரின் இராணுவத்தையும் அழிக்க வேகம் கொண்டிருந்த புஷ்சும், சதாமுக்கு பின்னரான கட்டமைப்புகளை துளியளவும் கருத்தில் கொண்டிருந்திருக்கவில்லை. அதையே தான் ஒபாமாவும் லிபியாவில் செய்துள்ளார். அதை அவர் ஏற்றுமுள்ளார்.
.

மேற்கு தம் ஆதரவு குழுக்களை ஐ.நா. மூலம் அங்கு ஆட்சியில் அமர்த்த முனைந்தாலும் அக்குழுக்களுக்கு போதிய பலம் நாட்டில் இல்லாததால் அந்நாடு தொடர்ந்தும் குழப்பம் மிக்க நாடாகவே உள்ளது.
.