லெபனானில் ஹிஸ்புல்லா அணி வெற்றி

Lebanon

திங்கள்கிழமை லெபனான் (Lebanon) நாட்டில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சியா இஸ்லாமிய குழுவான ஹிஸ்புல்லாவும் (Hezbullah) அதன் கூட்டு அணிகளும் அரை பங்குக்கும் மேலான ஆசனங்களை கைப்பற்றி உள்ளன.
.
மொத்தம் 128 ஆசங்களில், 67 ஆசங்களை ஹிஸ்புல்லாவும் அதன் ஆதரவு குழுக்களும் பெற்றுள்ளன.
.
ஈரான் சார்பு இயக்கமான ஹிஸ்புல்லாவின் வெற்றியால் விசனம் கொண்டுள்ளது இஸ்ரேல். சிரியாவில் இடம்பெறும் யுத்தத்திலும் ஹிஸ்புல்லா சிரிய Assad அரசு சார்பில் சண்டையிட்டு வெற்றிகளை கண்டிருந்தது. பலமான எதிரி ஆயுத குழுவான ஹிஸ்புல்லா தற்போது லெபனானின் ஆட்சியையும் கைப்பற்றுவது இஸ்ரேலுக்கு வெறுப்பாக உள்ளது.
.
மேற்கு நாடுகளின் ஆதரவை கொண்ட, சுனி இஸ்லாமிய கட்சியான Future Movement முன்னர் கைப்பற்றி இருந்த ஆசங்களில் 1/3 பங்கை இம்முறை இழந்துள்ளது. அதனால் அதன் தலைவரும், தற்போதைய பிரதமருமான Saad Hariri பலம் மேலும் சரிந்துள்ளது.
.
ஹிஸ்புல்லாவின் வெற்றி காரணமாக லெபனானுக்கான தனது உதவிகளை அமெரிக்காவும் நிறுத்தக்கூடும். அதேவேளை ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் வருடாந்தம் $800 மில்லியன் உதவி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
.
ஹிஸ்புல்லா என்பதன் அர்த்தம் Party of Allah ஆகும். இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த காலத்தில், இஸ்ரேலை விரட்ட உருவான குழுவே ஹிஸ்புல்லா.
.