லெபனான் உள்ளும் சவுதி-ஈரான் முரண்பாடு

Lebanon

நீண்ட காலமாக சுனி, சியா (Sunni, Shiite) இஸ்லாமியர்கள் தம்மிடையே மோதிவருகின்றனர். அந்நியர் சிலர் அந்த பிரிவினையை அவ்வப்போது தமக்கு சாதகமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். சுனி இஸ்லாமியராக சவுதிக்கும், சியா இஸ்லாமியராக ஈரானுக்கும் இடையே அவ்வகையான முரண்பாடு தற்போது முற்றி வருகிறது. அதற்கு அண்டிய நாடுகளும் பலியாகி வருகின்றன.
.
யெமன் (Yemen) நாட்டில் சவுதி-ஈரான் முரண்பாடு கொடூரமான யுத்தமாக மாறியுள்ளது. அவ்வகை குழப்பம் தற்போது லெபனானிலும் (Lebanon) தோன்றலாம் என்று அச்சப்பட வைக்கிறது.
.
கடந்த சனிக்கிழமை லெபனானின் பிரதமர் Saad Hariri தனது பதவியைவிட்டு விலகி இருந்தார். சுன்னி இஸ்லாமியராக Hariri தனது பதவி விலகலை சுனி நாடான சவுதியில் தங்கியிருந்த போதே செய்துள்ளார். அதனால் அதை அவர் சவுதியின் அழுத்தத்தின் காரணமாகவே செய்துள்ளார் என்று நம்பப்படுகிறது. Hariri வீட்டு காவலில் உள்ளதாக வெளிவந்த செய்திகளை மறுக்கிறது சவுதி.
.
லெபனானின் ஜனாதிபதி, Hariri தன்னுடன் நேரடியாக சந்திக்காதவரை, அவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றுள்ளார்.
.
Hariri தனது உயிருக்கு ஆபத்து தோன்றியுள்ளது என்று கூறியே பதவியை விலகியுள்ளார். லெபனானில் மிகவும் பலம்கொண்ட சியா இஸ்லாமியர் அணியான ஹேஸ்புல்லாவையே (Hezbollah) Hariri தனது எதிரியாக கருதுகிறார். ஹேஸ்புல்லா ஒரு ஈரான் ஆதரவு அணி.
.
நேற்று சவுதி அரேபியா லெபனானில் உள்ள சவுதி மக்களை லெபனானில் இருந்து வெளியேறுமாறும் கூறியுள்ளது.
.

ஈரானுக்கும், அதன் சார்பு அணிகளுக்கும் எதிராக சவுதி செயல்படுவதையிட்டு மகிழும் முதலாவது நாடு இஸ்ரேல்.
.