வடகொரியா அணுகுண்டு பரிசோதனை, அதனால் நிலநடுக்கம்

NorthKoreaTest

வடகொரியா இன்று ஞாயிரு தனது 6வது அணுக்குண்டு பரிசோதனையை செய்துள்ளது என்றும், அதனால் வடகொரியா-சீனா எல்லையில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்க அதிர்வை United States Geological Survey பதிவு செய்துள்ளது. சீனாவின் நிலநடுக்க கண்காணிப்பு அமைப்பு இந்த நிலநடுக்கம் 6.3 magnitude தாக்கத்தை கொண்டது என்றுள்ளது.
.
வடகொரியாவின் முன்னைய அணுகுண்டு வெடிப்புகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவை 6.3 அளவில் இருந்திருக்கவில்லை. அதனால் இன்றைய குண்டு அதி பெரிய குண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
.
இந்த வெடிப்புக்கு சற்று முன் வடகொரியா தாம் ஐதரசன் குண்டை (hydrogen bomb) தயாரித்து உள்ளதாக கூறி இருந்தது.
.
Atomic bomb அணுவை உடைப்பதன் மூலம் பெறப்படும். ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் வீசப்பட்ட atomic குண்டுகள் முறையே 15 கிலோ-தொன், 20 கிலோ-தொன் TNT வெடிமருந்துக்கு இணையான தாக்கத்தை மட்டுமே உருவாக்கி இருந்தன.
.

ஆனால் Hydrogen bomb (அல்லது H-bomb) இரண்டு படிமுறையில் செயல்படும். முதலில் atomic குண்டுபோல் அணு பிளவு செய்யப்படும். பின் அந்த சக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு செய்யப்படும். 1952 ஆம் ஆண்டு அமெரிக்கா வெடித்த hydrogen குண்டு 10,000 கிலோ-தொன் TNT வெடிமருத்துக்கு இணையான தாக்கத்தை உருவாக்கி இருந்தது.
.