வடகொரியா ஏவியது கணை, ஜப்பானுக்கு மேலாக

NorthKoreaICBM

இன்று செய்வாய் கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:58 மணியளவில் வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவி உள்ளது. இம்முறை அந்த ஏவுகணை ஜப்பான் மேலாக சென்று பசுபிக் கடலுள் வீழ்ந்துள்ளது. இதனால் கோபம் கொண்டுள்ளது ஜப்பான்.
.
இன்று ஏவப்பட்ட ICBM வகை கணை சுமார் 550 km உயரம் வரை உயர்ந்து, 2,700 km தூரம் சென்று வீழ்ந்துள்ளது. கடலுள் விழமுன் இந்த கணை 3 துண்டங்களாக பிரிந்து வீழ்ந்துள்ளது. இது ஜப்பானின் Hokkaido தீவின் மேலாக சென்றுள்ளது.
.
வடகொரியா 1998 ஆம் ஆண்டிலும், 2009 ஆம் ஆண்டிலும் ஜப்பான் மேலாக கணைகளை ஏவி இருந்திருந்தாலும், அவை செய்மதிகள் என்று கூறியிருந்தது வடகொரியா. இந்த இரு நிகழ்வுகளும் தற்போதைய தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) பதவிக்கு முன்னர் இடம்பெற்றவை. கிம் ஜொங் உன் பதவிக்கு வந்த 2011 ஆம் ஆண்டு முதல் வடகொரியா 80 கணைகளை ஏவி இருந்தாலும், இம்முறையே முதல் முறையாக ஜப்பான் மேலாக கணை ஒன்று ஏவப்பட்டு உள்ளது.
.

தற்போது அப்பகுதியில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து யுத்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இதை வன்மையாக எதிர்க்கின்றன வடகொரியாவும், சீனாவும்.
.