வடகொரியா ஏவியது ICBM, அமெரிக்கா ஆவேசம்

NorthKoreaTest

வடகொரியா இன்று செய்வாய் மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய இருகட்ட ICMB ஏவுகணை (two-stage Intercontinental Ballistic Missile) ஒன்றை ஏவியதை அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது.
.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய வடகொரியா “உலகின் எந்த பாகத்தையும் தாக்கக்கூடிய நம்பிக்கையும், பலமும் கொண்ட நாட்டை உருவாக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளது. இந்த ஏவுகணை 40 நிமிட நேரத்தில் சுமார் 2,800 km உயரம் சென்று, 933 km தொலைவில் வீழ்ந்துள்ளது.
.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலடி வழங்குவது என்று தீர்மானிக்க அமெரிக்காவின் அதிகாரிகள் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி உள்ளனர். கடந்த ஜனவரியில் டிரம்ப் இவ்வாறு வடகொரியா செய்வது தன் ஆட்சியில் நடக்காது (won’t happen) என்றிருந்தார்.
.
அண்மையில் அமெரிக்கா தாய்வானுக்கு $1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்து சீனாவின் வெறுப்பை தேடியிருந்தது. இந்நிலையில் சீனாவின் உதவி இன்றி அமெரிக்காவால் வடகொரியாவை கட்டுப்படுத்துவதும் சுலபமல்ல.
.
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவை தம் நாட்டில் இருந்தே தாக்கக்கூடிய மூன்றாவது நாடாக வடகொரியா இணைந்துள்ளது.
.
ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக விடுத்த அறிக்கை ஒன்றில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை கொரியாவில் நிறுத்தினால், தாம் நிலைமையை கட்டுப்படுத்த தாம் உதவுவதாக கூறப்பட்டுள்ளது.

.