வடகொரியா மீண்டும் ஏவியது ஏவுகணை

NorthKoreaTest

உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை Kusong என்ற இடத்தில் இருந்து Sea of Japanனை நோக்கி ஏவியுள்ளது என்கிறது தென்கொரியா. இந்த ஏவுகணை சுமார் 700 km சென்று வீழ்ந்துள்ளது. ஜப்பானின் கணிப்பின்படி இந்த ஏவுகணை 30 நிமிடங்கள் பறந்தபின் கடலுள் வீழ்ந்துள்ளது. இந்த ஏவுகணை தொடர்பான விபரங்களை தென்கொரியா தொடர்ந்தும் சேகரிக்கிறது.
.
வடக்குடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்பும் ஜனாதிபதி தெற்கில் ஆட்சிக்கு வந்தபின் முதல் இடம்பெற்ற வடக்கின் ஏவுகணை பரீட்சார்த்தம் இதுவாகும். இன்றைய ஏவல் தொடர்பாக கலந்துரையாட தென்கொரிய ஜனாதிபதி Moon Jae-in ஐ.நா. பாதுகாப்பு சபையை (security council) கூடும்படி அழைத்துள்ளார்.
.
வடகொரியா அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளின்படி செயல்படாவிடின் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கு இடையில் “major, major conflict” உருவாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார். இன்று ஞாயிறு இடம்பெற்ற ஏவல் தொடர்பாக டிரம்ப் இன்னமும் கருத்து எதையும் வெளியிட்டு இருக்கவில்லை.
.