வடகொரியா மீது முழுத்தடையை விரும்பும் அமெரிக்கா

NorthKoreaTest

வடகொரியா மீது முழுமையான தடையை விதிக்க விரும்புகிறது அமெரிக்கா. வடகொரியாவுக்கு எரிபொருள் (பெட்ரோல்) விற்பனை செய்தல், எரிவாயு விற்பனை செய்தல், வடகொரியாவிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தல், வடகொரியார் (சீனா, ரஷ்யா ஆகிய) வெளிநாடுகளில் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கல் ஆகியவற்றை தடை செய்ய அமெரிக்கா ஒரு திட்டத்தை ஐ.நா. முன் வைக்கிறது. அண்மையில் வடகொரியா செயல்படுத்திய H-Bomb காரணமாகவே அமெரிக்கா இந்த தடைகளை விதிக்க முனைகிறது.
.
ஆனால் இந்த தடைக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆதரவு வழங்குமா என்பது கேள்விக்குறியே. ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டின், தென்கொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பில், வடகொரியா மீதான எரிபொருள் தடையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளார். அமெரிக்காவோ அல்லது வடகொரியாவோ யுத்தத்தை ஆரம்பிப்பதை சீனாவும், ரஷ்யாவும் வன்மையாக கண்டிக்கின்றன.
.
அதேவேளை வடகொரியா விவகாரம் தீர்க்க முடியாத (impossible) ஒன்று ஆகலாம் என்றும் கூறியுள்ளார் பூட்டின். ரஷ்யாவும், சீனாவும் பேச்சுவார்த்தைகள் மூலமே இந்த விவகாரம் தீர்க்கப்படல் வேண்டும் என்கின்றன.
.
வடகொரியாவின் 80-90% வரையான ஏற்றுமதி/இறக்குமதி பொருளாதாரம் சீனாவுடனேயே இடம்பெறுகிறது. அதனால் சீனாவின் ஆதரவு இன்றி வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிப்பது சாத்தியமற்றது.
.

வடகொரியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடு ரஷ்யாவே. இந்தியாவும் வடகொரியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளது.
.