வட, தென் கொரியாக்கள் சுமூகமான பேச்சு

NorthKoreaTest

இன்று செவ்வாய் கிழமை வடகொரியாவுக்கு தென்கொரியாவுக்கும் இடையே இடம்பெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் முடிந்துள்ளது. சுமார் 11 மணி நேரம் வரை இடம்பெற்ற  இந்த பேச்சுக்களின் இறுதியில் இரு தரப்பும் கூட்டாக 3 தீர்மானங்கள் கொண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
.
1) வடகொரியா பெப்ருவரி 9ஆம் திகதி தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ளும்.
.
2) இரு தரப்பு இராணுவங்களுக்கு இடையே தெடர்புகள் ஏற்படுத்தி முறுகல் நிலையை குறைக்க நடவடிக்கை எடுத்தல்.
.
3) இரண்டு தரப்பும் ஒரே மக்களாக கருத்தில் கொண்டு தொடர்ந்தும் பேச்சுக்களை நடாத்துதல்.
.
இந்த இரண்டு தரப்பும் எந்தவித முன்நிபந்தனை இன்றியே பேசின. மாறாக அமெரிக்காவோ, வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே பேச உள்ளதாக முன்நிபந்தனை வைத்துள்ளது.
.
அமெரிக்கா இந்த நேரடி பேச்சுவார்த்தைகளை சிலவேளைகளில் வாழ்த்தியும், சிலவேளை சந்தேக கண்ணோடு கணித்து கருத்துக்கள் வெளியிட்டு உள்ளது.
.
இந்த நேரடி பேச்சுக்கு ஆதரவாக சீனா போன்ற பலம் பின்னணியில் இருந்ததா என்று இதுவரை அறியப்படவில்லை.
.
யுத்த காலத்தில் பிரிந்த குடும்பங்களை இணைக்கும் விவகாரமும் பேச்சுக்கு எடுத்து கொண்டிருந்தாலும், அந்த விடயத்தில் இணக்கப்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
.