வர்த்தக கப்பல் இணைப்பு சுட்டியில் இலங்கை 22ம் இடம்

வர்த்தக கப்பல் இணைப்பு சுட்டியில் இலங்கை 22ம் இடம்

ஐ. நாவின் UNCTAD (United Nations Conference on Trade and Development) தயாரிக்கும் Liner Shipping Connectivity Index (LSCI) என்ற சுட்டியில் இந்த ஆண்டு இலங்கை உலக அளவில் 22ம் இடத்தை அடைந்துள்ளது. 

இந்த சுட்டி ஒரு நாடு உலக வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு வழங்கும் சேவையின் வல்லமையை காட்டுகிறது.

சீனா 1,187 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திலும், தென் கொரியா 640 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 591 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன. அமெரிக்கா 493 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் உள்ளது.

ஐரோப்பாவில் ஸ்பெயின் 403 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது.

இந்தியா 14ம் இடத்திலும், பாகிஸ்தான் 34ம் இடத்திலும் உள்ளன.

வரைபு: UN