வாக்கெடுப்பில் துருக்கி ஜனாதிபதிக்கு மேலும் பலம்

Turkey

தற்போது துருக்கியில் உள்ள பாராளுமன்ற ஆட்சி முறையை இல்லாது செய்து, பிரதமர் அமைப்பையும் இல்லது செய்து, முழுமையான அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்த ஆதரவு கேட்டு தற்போதைய ஜனாதிபதி அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை இன்று ஞாயிரு நடாத்தி இருந்தார். இந்த புதிய ஜனாதிபதி ஆட்சி முறைக்கு 51.2% ஆதரவு வாக்குகள் கிடைத்து உள்ளன.அதேவேளை 48.8% வாக்குகள் இந்த புதிய முறையை மறுத்துள்ள. அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவர மேலும் ஒரு கிழமை செல்லலாம்.
.
மேற்கின் ஆதரவு கொண்ட இராணுவ புரட்சி மூலம் தற்போதைய ஜனாதிபதி Recep Tayyip Erdoganனை பதவியில் இருந்து விலக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்த வேளையிலேயே Erdogan இவ்வாறு தனது பலத்தை அதிகரிக்க புதிய அரசியல் அமைப்பை அமைக்க முன்வந்தார்.
.
இவ்வாறு Erdogan சர்வாதிகார ஜனாதிபதி ஆவதை விரும்பாத மேற்கு நாடுகள் Erdogan அணியின் பிரச்சாரங்களுக்கு தமது நாடுகளில் தடை விதித்து வந்தன. ஐரோப்பிய நாடுகளில் வாழும் துருக்கி மக்களும் இந்த அபிப்பிராய வாக்கெடுப்பில் பங்கு கொண்டிருந்தனர்.
.

சுமார் 86% வாக்காளர் இந்த வாக்கெடுப்பில் வாக்களித்து உள்ளனர். இந்த வாக்களிப்பு நேர்மையாக நடைபெறுவதை கண்காணிக்க பலநாட்டு குழுக்கள் பிரசன்னமாக இருந்தன.
.