விசனம் கொண்ட மோதி உழவர் மீது பாச்சல்

விசனம் கொண்ட மோதி உழவர் மீது பாச்சல்

டெல்லியில் தங்கியிருந்து சுமார் இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் செய்துவரும் உழவர் மீது விசனம் கொண்ட இந்திய பிரதமர் இன்று ஞாயிற்றுக்கிழமை வசைபாடி உள்ளார். ஜனவரி 26ம் திகதி ஆர்பாட்டகாரர் Red Ford என்ற கட்டடத்துள் நுழைந்தது இந்திய தேசிய கொடிக்கு அவமானம் என்றும், நாடு கவலை அடைந்துள்ளது என்றும் மோதி தனது வானொலி உரையில் கூறியுள்ளார்.

அண்மையில் மோதி அரசு நடைமுறை செய்யவிருந்த அறுவடைகளை கொள்வனவு செய்யும் முறையை மாற்றும் சட்டங்களை உழவர்கள் எதிர்த்து வருகின்றனர். முன்னைய முறைப்படி அறுவடை காலத்தில் அரசின் கட்டுப்பாடில் உள்ள அமைப்பு மிதமான அறுவடைகளை நியாய விலைக்கு (MSP, minimum support price) கொள்வனவு செய்து பின் விற்பனை செய்யும்.

புதிய முறைப்படி அரசுக்கு பதிலாக இந்தியாவில் செயற்படும் சர்வதேச நிறுவனங்கள் இடைத்தாராக செயற்படுவார். புதிய முறையில் பெரிய நிறுவனங்கள் தம்மை அடிபணிய வைக்கலாம் என்று பயம் கொண்டுள்ளனர் உழவர்.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உழவு வாகன ஊர்வலம் ஒன்றின்போது ஏற்பட்ட வன்முறைகளுக்கு ஒருவர் பலியாகி இருந்தார். வெள்ளிக்கிழமை பா.ஜ. ஆதரவு குழு ஒன்று தம் மீது கல்லெறிந்து வன்முறை செய்ததாக உழவர்கள் கூறி உள்ளனர்.

எதிர் கட்சிகளும், சில பா.ஜ. உறுப்பினர்களும் மேற்படி சட்டத்தை நிறுத்த கேட்டுள்ளனர். ஆனால் மோதி அரசு 18 மாதங்களுக்கு சட்டத்தை இடைநிறுத்த மட்டும் இணங்கி உள்ளது.

2018 மற்றும் 20196ஆண்டுகளில் மட்டும் 20,638 உழவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துள்ளனர் என்கிறது இந்தியாவின் National Crime Records Bureau.