விசாகப்பட்டின வாயு தொழிலக கசிவுக்கு 12 பேர் பலி

LG_Polymers

இந்தியாவின் ஆத்திர பிரதேச மாநிலத்தின் கரையோர நகரான விசாகப்பட்டினத்தில் அனுமதி இன்றி இயங்கிய வாயு தொழில் நிலையம் ஒன்றில் வியாழக்கிமை ஏற்பட்ட கசிவுக்கு 2 சிறுவர் உட்பட 12 பேர் பலியாகியும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். தென் கொரியாவை தளமாக கொண்ட LG Polymers என்ற நிறுவனத்துக்கு உரியது இந்த தொழிலகம்.
.
மேற்படி தொழிலகத்தை விரிவாக்க விண்ணப்பித்து இருந்தாலும், அதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கவில்லை. தாம் உரிமை பெறாமலேயே இயங்கியதாக LG Polymers கூறியுள்ளது.
.
வியாழன் அதிகாலை 3:30 மணியளவில் styrene (vinylbenzene அல்லது ethenylbenzene) என்ற நச்சு வாயு கசிய ஆரம்பித்து உள்ளது. அப்பொழுது உறங்கிக்கொண்டு இருந்த அப்பகுதி மக்கள் மயக்கம் அடைந்துள்ளனர். குறைந்தது 1,000 பேர் இந்த கசிவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
.
2001 ஆம் ஆண்டு முதல் இந்த தொழிலகம் மேறப்டி இடத்தில் இயங்கி வந்திருந்தாலும், 2019 ஆம் ஆண்டு விரிவாக்கம் அனுமதி பெற்று இருக்கவில்லை என்று கூறப்படுகிது.
.