விமான கைப்பையுள் இலத்திரனியல் பொருட்களுக்கும் தடை

CarryOn

அண்மை காலங்களில் விமான பயணிகள் தமது carry-on பைகளுள் பெருமளவு திரவங்கள், கழிகள் எடுத்து செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் laptops, tablets, cameras, DVD Players, video games போன்ற இலத்திரனியல் பொருட்கள் எடுத்து செல்லப்படுவது தடை செய்யப்பட்டு இருந்திருக்கவில்லை. இப்போது அவ்வாறான இலத்திரனியல் பொருட்களுக்கும் சில விமானங்களில் தடை வந்துள்ளது.
.
அமெரிக்கா நோக்கி வரும் சில விமான சேவைகளில் carry-on பைகளில் cell phone அளவுக்கும் பெரிதான இலத்திரனியல் பொருட்கள் எடுத்து செல்ல முடியாது. அவ்வகை பொருட்கள் checked-in பைகளில் மட்டுமே வைக்கப்படலாம். மேற்படி தடை அமெரிக்காவுள் ஆரம்பித்து அங்கேயே முடியும் விமான சேவைகளுக்கு இல்லை.
.
ஜோர்டான் நாடும், சவுதியும் இந்த தடை தொடர்பான அறிவிப்புக்களை தமது நாட்டு பயணிகளுக்கும், விமான அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவித்துள்ளது. Royal Jordanian Airlines விமான சேவை இந்த தடையை New York, Chicago. Detroit, Montreal ஆகிய நகரங்களுக்கான சேவைகளில் நடைமுறைப்படுத்தி உள்ளது.
.
மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய இடங்களில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்களுக்கே இந்த தடை இருக்கும் என்று கூறப்படுகிறது.
.
*** பிந்திய இணைப்பு ***
.
இந்த தடைக்கு உட்பட்ட விமான சேவைகள் ஆரம்பிக்கும் விமான நிலையங்கள்:

Amman, Cairo, Kuwait City, Doha, Dubai, Istanbul, Abu Dhabi, Riyadh, Jeddah and Casablanca.

.

.