வியட்னாமிலும் அணுக்குண்டுக்கு முனைந்தது அமெரிக்கா

FractureJaw

தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ள முன்னாள் அமெரிக்க இராணுவ இரகசியம் ஒன்று வியட்னாம் யுத்த காலத்திலும் அமெரிக்க படைகள் அணுக்குண்டு வீச முயற்சி செய்திருந்ததாம். அப்போது அங்கு நிலைகொண்டிருந்த William Westmoreland என்ற அமெரிக்க இராணுவ ஜெனரலின் இந்த இரகசிய முயற்சியை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி Lyndon Johnson உடனடியாக தடுத்துள்ளார்.
.
1968 ஆம் ஆண்டில் தென் வியட்னாமில் நிலைகொண்டிருந்த ஜெனரல் William Westmoreland அமெரிக்க ஜனதிபதிக்கு தெரிவிக்காமல் சில அணுகுண்டுகளை தென் வியட்னாமுக்கு நகர்த்த முயன்றுள்ளார். அதற்கு அப்போதைய பசுபிக் படை தலைமை இராணுவ அதிகாரியும் இணங்கி உள்ளார். இந்த அணு ஆயுத நகர்வுக்கான இரகசிய இராணுவ அறிவிப்பு ஒன்றையும் படைகளுக்கு அனுப்பியுள்ளார். அதற்கு அமைய ஆயுத நகர்வு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன.
.
இந்த இரகசிய நடவடிக்கைக்கு operation Fracture Jaw என்று நாம் இடப்பட்டு இருந்தது.
.
இந்த அணு ஆயுத நடவடிக்கையை அறிந்த ஜனாதிபதி Lyndon Johnsonனின் இராணுவ ஆலோசகர் Walt Rostow உண்மையை ஜனாதிபதிக்கு கூறியுள்ளார். அப்போதே Johnson தலையிட்டு அணுகுண்டுகள் வியட்னாமை அடைவதை தடுத்துள்ளார்.
.
1950 ஆம் ஆண்டு கொரியாவில் அமெரிக்கா நேரடியாக சீனாவுடன் மோதியதை போல மீண்டும் வியட்னாமில் சீனாவுடன் நேரடியாக மோதுவதை Johnson விரும்பி இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
.
சுமார் 23 ஆண்டுகளின் முன் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணு குண்டுகள் வீசப்பட்டு, ஜப்பானும் நிபந்தனை எதுவும் இன்றி சரண் அடைந்திருந்தது.

.