வியட்னாமில் ஒபாமா, ஆயுதத்தடை நீக்கம்

VietnamObama

இன்று திங்கள் அமெரிக்க ஜனாதிபதி வியட்னாம் சென்றுள்ளார். சுமார் 40 வருடங்களின் முன் அமெரிக்க இராணுவம் வியட்னாமில் இருந்து விரட்டப்பட்டு இருந்தாலும் சமீப காலங்களில் அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் உறவு பலமாகி வந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தை விரட்டிய கம்யூனிஸ்ட் கட்சியே இன்றும் வியட்னாமை ஆண்டாலும் Bill Clinton, Obama ஆகியோர் பதவில் உள்ளபோதே வியட்னாம் சென்றுள்ளனர்.
.
ஒபாமாவின் இன்றைய பயணத்தின்போது அமெரிக்கா வியட்னாம் மீதான தனது 40 வருட பழமையான ஆயுத தடையையும் நீக்கியுள்ளது.
.
அத்துடன் அமரிக்காவின் Harvard பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல்கலைக்கழகம் ஒன்றை Ho Chi Minh நகரிலும் நிறுவ இணங்கியுள்ளனர். அத்துடன் வியட்னாமின் VietJet விமான சேவை 100 அமெரிக்க Boeing 737 விமானங்களை கொள்வனவு செய்யவும் இணங்கியுள்ளது. இதன் மொத்த கொல்வனவு தொகை $11 பில்லியன்.
.
அதேவேளை கடந்த கிழமை அமெரிக்கா தமது நாட்டுள் பயங்கரவாதிகளை வளர்க்கிறது என்று வியட்னாம் அரசின் பிரச்சாரங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அமெரிக்காவில் பலமுடம் இயங்கும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வியட்னாம் குழுக்களையே வியட்னாம் அரசு குறிப்பிட்டு இருந்தது.
.
ஆசியாவில் தமது நடவடிக்கைகள் சீனாவுக்கு எதிரான நோக்கம் கொண்டவை அல்ல என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
.