விரட்டிய செலன்ஸ்கி மீண்டும் வெள்ளை மாளிகைக்கு

விரட்டிய செலன்ஸ்கி மீண்டும் வெள்ளை மாளிகைக்கு

சனாதிபதி ரம்பாலும் உதவி சனாதிபதி வன்சாலும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி (Zelenskiy) மீண்டும் வெள்ளை மாளிகை அழைக்கப்பட்டுள்ளார். 

இந்த சந்திப்பு திங்கள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரம்பும், பூட்டினும் மேற்கொண்ட அலாஸ்கா சந்திப்பிலும் இந்த சந்திப்பு பிரதானமாக இருக்கும். 

இம்முறை இவருடன் ஜெர்மனியின் அதிபர் Merz, பிரான்ஸின் சனாதிபதி Macron, பிரித்தானியாவின் பிரதமர் Starmer, இத்தாலியின் பிரதமர் Meloni, ஐரோப்பிய ஒன்றியத்தின் von der Leyen ஆகியோரும் கூடவே செல்கின்றனர்.

பூட்டின் கேட்பதை எல்லாம் வழங்கி, சமாதானத்தை ஏற்படுத்திய பெருமையை அடைய ரம்ப் ஆர்வம் கொள்வார். ஆனால் ஐரோப்பிய தலைவர்கள் அதை விருப்பார். அதனால் இந்த பெரும் சந்திப்பும் திடீர் தீர்வை தரும் என்று நம்புவது கடினம்.

இங்கே கவலைக்குரிய விசயம் என்னவென்றால் மேற்படி ஐரோப்பிய அரசியல் தலைமைகள் யூக்கிறேன் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனையை காசா மக்கள் மீது கொண்டிருக்கவில்லை.