விரைவில் பயணிகள் வாகனங்களுக்கு தட்டுப்பாடு

விரைவில் பயணிகள் வாகனங்களுக்கு தட்டுப்பாடு

உலக அளவில் விரைவில் கார் போன்ற பயணிகள் வாகனங்களுக்கு தட்டுப்பாடு வரவுள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகள் வாகனங்களுள் computer chip உள்ளடக்கப்பட்டு வந்தமையே காரணம். வாகனங்களின் மிகையான chip பயன்பாடு காரணமாகவும், கரோனா ஆசிய chip தயாரிப்பு தொழிற்சாலைகளை முடக்கியது காரணமாகவும் தற்போது computer chip களுக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது.

உலகின் மிக பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான Toyota தனது உலக அளவிலான உற்பத்தியை 40% ஆல் குறைக்க உள்ளது. பயணிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படும் chip க்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையே உற்பத்தி குறைப்புக்கு காரணம். அடுத்த மாதம் 900,000 பயணிகள் வாகனம் தயாரிக்க இருந்த Toyota, ஆனால் தற்போது அத்தொகையை 540,000 ஆக குறைக்கிறது.

ஜெர்மனியின் Volkswagen நிறுவனமும் தனது தயாரிப்பை மேலும் குறைக்க உள்ளதாக இன்று வியாழன் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் ஒருதடவை Volkswagen தனது தயாரிப்பை குறைத்து இருந்தது.

Chip தட்டுப்பாடு காரணமாக General Motors, Ford, Daimler, BMW, Renault ஆகிய பயணிகள் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஏற்கனவே தமது தயாரிப்புகளை குறைத்து உள்ளன.

Chip தட்டுப்பாடு இந்த ஆண்டின் இறுதிவரை தொடரும் என்றும், கரோனாவின் உக்கிரம் தொடர்ந்தால் chip தட்டுப்பாடு மேலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

உற்பத்தி குறைய, கேள்வி அதிகரித்து வாகனங்களின் விலையும் அதிகரிக்கும். அத்துடன் பாவித்த வாகனங்களுக்கும் விலை அதிகரிக்கும்.