விலைவாசி வளரும் ஆசிய நகரங்கள், கொழும்பு 23 இடங்கள் மேலேறியது

விலைவாசி வளரும் ஆசிய நகரங்கள், கொழும்பு 23 இடங்கள் மேலேறியது

இந்த ஆண்டுக்கான அதிக விலைவாசி கொண்ட (expensive) நகரங்கள் பட்டியலில் ஆசிய நகரங்கள் வேகமாக மேலேறி உள்ளன. உலகின் மிக விலைவாசி உயர்ந்த முதல் 10 நகரங்களில் Hong Kong, Tokyo, Shanghai, Guangzhou, Seoul ஆகிய 5 நகரங்கள் இடம்பெற்று உள்ளன.

Worldwide Cost of Living Index என்ற இந்த கணிப்பு லண்டன் நகரை தளமாக கொண்ட Economist Intelligence Unit என்ற அமைப்பால் தயாரிக்கப்பட்டது.

இலங்கையின் கொழும்பு நகரின் 162ம் இடத்தில் இருந்து 139ம் இடத்துக்கு உயர்ந்து உள்ளது. அதாவது 23 இடங்கள் மேலேறி உள்ளது. அதனால் கொழும்பு fastest-rising நகரமாகியது.

அதேவேளை ஐரோப்பாவில் உச்சத்தில் இருந்த Paris நகரம் முதல் 30 இடங்களுக்கு கீழே வீழ்ந்து உள்ளது. Madrid, Rome, Brussels ஆகிய நகரங்களும் கூடவே கீழே வீழ்ந்து உள்ளன.

உலகில் அதிக விலை கொண்ட முதல் 10 நகரங்கள் முறையே:
1) Hong Kong, 2) New York, 3) Geneva, 4) London, 5) Tokyo, 6) Tel Aviv, 7) Zurich, 8) Shanghai, 9) Guangzhou, 10) Seoul