வீழ்ந்த F 35 விமானத்தால் ஜப்பான் அவதி

F-35A

கடந்த செவ்வாய் கிழமை ஜப்பானின் F 35A வகை யுத்த விமானம் ஒன்று ஜப்பானின் வடகிழக்கு கடலுள் வீழ்ந்துள்ளது. வீழ்ந்த இந்த அதிநவீன யுத்த விமானத்தை மீட்க ஜப்பானும், அமெரிக்காவின் கடுமையாக முயற்சிக்கின்றன. விமானியும் இதுவரை அகப்படவில்லை.
.
F 35 வகை விமானங்களே அமெரிக்காவின் தற்போதைய அதி நவீன யுத்த விமானங்கள். இவற்றின் ஒவ்வொரு பாகமும் நவீன தொழிநுட்பம் கொண்டவை. வீழ்ந்து உடைந்துள்ள விமானத்தின் எந்தவொரு பகுதியும் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் பாரிய ரகசியங்களை வழங்கக்கூடியவை. அதனால் எந்தவொரு பாகமும் ரஷ்யாவின் அல்லது சீனாவின் கையில் அகப்படாது இருப்பது அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் அவசியம்.
.
ஜப்பானின் Misawa விமான படை தளத்தில் இருந்து சென்ற நான்கு விமானங்களில் ஒன்றே திடீரென, சுமார் 135 km தூரம் கடலுள், காணாமல் போயுள்ளது. இப்பகுதியில் கடலின் ஆழம் சுமார் 1,500 மீட்டர் ஆகும்.
.
இந்த விபத்து காரணமாக ஜப்பானிடம் உள்ள மற்றைய 13 இவ்வகை விமானங்களும் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு F 35 வகை யுத்த விமானமும் சுமார் $100 மில்லியன் பெறுமதியானவை.
.
Cold War காலத்தில், 1968 ஆம் ஆண்டில், தாண்டுபோன K 129 வகை ரஷ்ய அணு ஆயுத நீர்மூழ்கியை கைப்பற்ற 1974 ஆம் ஆண்டில் அமெரிக்கா பெரும் முயற்சி செய்திருந்தது. Project Arizona என்ற தலைப்பில் செய்து கொண்ட இந்த முயற்சியில், அமெரிக்கா சில பாகங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. அந்த நீர்மூழ்கி சுமார் 4,900 மீட்டர் ஆழத்தில் இருந்தது.

.