வெனிசுவெலா ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி

Maduro_15_Million

தென் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் Nicolas Maduro தலைமையிலான இடதுசாரி ஆட்சியை கவிழ்த்து, பின் தனது பொம்மை அரச அரசை நிறுவ அமெரிக்காவின் ரம்ப் அரசு மீண்டும் முயற்சி செய்கிறது.
.
அதற்கு அமைய அமெரிக்கா தனது யுத்த கப்பல்களை தெற்கே நகர்த்தி உள்ளது. இந்த செய்தியை அமெரிக்க சனாதிபதி நேற்று புதன் அறிவித்து இருந்தார்.
.
அதற்கு முன் வெனிசுவெலா அரசு அமெரிக்காவுக்கு போதை கடத்தும் குழுக்களுக்கு உதவுகிறது என்று அமெரிக்கா அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருந்தது. குறிப்பாக கொலம்பியாவில் உள்ள Farc குழுவுக்கு Maduro உதவி செய்வதாக அமெரிக்கா கூறி உள்ளது. ஆனால் ஆதாரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை.
.
மேலும் Maduro வை கைப்பற்ற உதவி செய்வோர்க்கு அமெரிக்கா $15 மில்லியன் வழங்க உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்து உள்ளது.
.
கடந்த செவ்வாய் அமெரிக்கா Maduro வை விலக்கி, ஆளும் கட்சியும், அமெரிக்காவின் கையில் உள்ள எதிர்க்கட்சியும் இணைந்த இடைக்கால கூட்டு ஆட்சி ஒன்றை அமைக்கும் திட்டத்தையும் வெளியிட்டு இருந்தது.
.
கியூபா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் Maduro ஆட்சிக்கு ஆதரவு வழங்க, அமெரிக்காவும் மற்றைய மேற்கு நாடுகளும் அமெரிக்காவின் கையில் உள்ள எதிர்கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றன.
.
சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா தன் படைகளை அப்பகுதிக்கு நகர்த்தியபொழுது ரஷ்யா பெருமளவு ஆயுதங்களை Maduro வுக்கு வழங்கி இருந்தது. அதனால் அமெரிக்கா பின்வாங்கி இருந்தது.
.
அமெரிக்காவின் தடை காரணமாக வெனிசுவெலா தற்போது பெரும் பொருளாதார இடரில் உள்ளது.
.