வெள்ளைமாளிகையை எரித்தது கனடா, கூறுவது ரம்ப்

CanadaUS

கடந்த மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், கனடிய பிரதமர் ரூடோவுக்கும் இடையில் ரம்பின் புதிய உலோக வரிகள் தொடர்பாக காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்றதாம். அந்த உரையாடலின்போது ரம்ப் 1812 ஆம் ஆண்டில் கனடாவே அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை எரித்தது என்றும் கூறியுள்ளார்.
.
ரம்பின் அரைகுறை அறிவு War of 1812 தொடர்பானது. அந்த யுத்தம் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கு இடையிலானது. அப்போது கனடா என்ற ஒரு நாடே இருந்திருக்கவில்லை.
.
உண்மையில் பிரித்தானியா வெள்ளைமாளிகை உட்பட அமெரிக்க தலைநகரை தாக்கியதற்கு காரணம் அதற்கு முன்னர் அமெரிக்கா பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்த York (Ontario) பகுதியை தாக்கியதே.
.
பிரித்தானியாவில் வெள்ளைமாளிகை எரிக்கப்பட்டது 1814 இல், சுமார் 204 வருடங்களுக்கு முன்னர். இந்த வருடம் கனடா தனது 151 ஆவது வருடத்தையே கொண்டாடுகிறது.
.
ரம்ப் தான் அண்மையில் நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரிகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பே காரணம் என்று கூறியிருந்தார். கடந்த 25ஆம் திகதி உரையாடலின்போது கனடிய பிரதமர் கனடா எப்படி அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் என்று கேட்டபோதே ரம்ப் வெள்ளைமாளிகை எரிப்பு விடயத்தை கூறியுள்ளார்.

.