வேகமாக வீழ்ச்சி அடையும் இந்திய நாணயம் 

வேகமாக வீழ்ச்சி அடையும் இந்திய நாணயம் 

அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் பெறுமதி வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. டிசம்பர் 3ம் திகதி அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 90.30 இந்திய ரூபாய்கள் கிடைத்துள்ளன. இது வரலாற்றில் இந்திய ரூபாயின் அதிக வீழ்ச்சியாகும்.

1950ம் ஆண்டு அளவில் ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் 5.00 இந்திய ரூபாய்கள் கிடைத்தன. ஆனால் இந்திய ரூபாயின் பெறுமதி படிப்படியாக குறைந்து தற்போது 90.00 ரூபாய்கள் கிடைக்கின்றன.

படம்: The Indian Express 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய ரூபாய் தனது பெறுமதியை இழந்தது போலவே பா.ஜ. ஆட்சி காலத்திலும் வீழ்ச்சி அடைகிறது. 2015ம் ஆண்டில் மோதியின் பா.ஜ. ஆட்சியை கைப்பற்றியபோது ஒரு டாலருக்கு 63.33 இந்திய ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன. அனால் தற்போது 90.00 ரூபாய்கள் கிடைக்கின்றன.

ரம்பின் இந்தியா மீதான அதிகரித்த வரியும் இந்திய ரூபாயின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.

பெறுமதி குறைந்த நாணயம் ஏற்றுமதிக்கு நல்லது என்றாலும், அது நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு மிகவும் பாதகமானது. அதனால் வெளிநாடுகளின் முதலீடுகள் குறையும்.

இந்திய மத்திய வங்கியும் (RBI) தற்போதைக்கு இந்த விசயத்தில் தலையிடுவது இல்லை என்று கூறியுள்ளது.