வேனேசுவேலா அரசை கவிழ்க்க சென்ற அமெரிக்கர் கைது

Venezuela

அமெரிக்காவுக்கு உடன்படாத வேனேசுவேலா அரசை கவிழ்த்து, தனக்கு சாதகமான அரசை அங்கு நிறுவ அமெரிக்கா நீண்ட காலமாக முனைந்து வருகிறது. அந்த நோக்கத்துடன் வேனேசுவேலாவுள் அண்மையில் நுழைந்த அமெரிக்கர் உடன்பட 13 பேரை கைது செய்துள்ளது வேனேசுவேலா பாதுகாப்பு படைகள்.
.
அமெரிக்கர்களான 34 வயதுடைய Luke Denman, 41 வயதுடைய Airan Berry ஆகியோர் உட்பட 13 பேர் Colombia விலிருந்து வேனேசுவேலா நுழைய முனைந்த பொழுது கைது செய்யப்பட்டு உள்ளனர் என்கிறது வேனேசுவேலா அரசு. இவர்கள் முன்னாள் அமெரிக்க படையினர் என்றும் கூறப்படுகிறது.
.
கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை மீட்க அமெரிக்கா “every tool” களையும் பயன்படுத்தும் என்றுள்ளார் வெளியுறவு செயலாளர் Mike Pompeo.
.
கடந்த மாதம் வேனேசுவேலவின் சனாதிபதி மீது அமெரிக்கா “narco-terrorism” குற்றத்தை சுமத்தி இருந்தது. அத்துடன் அவரை கைது செய்ய உதவுவோருக்கு $15 மில்லியன் சன்மானம் வழங்கப்படும் என்றும் ரம்ப் அரசு அறிவித்து இருந்தது.
.
​கைது செய்யப்பட்டுள்ள Denman னும், Berry யும் தங்களை Florida மாநிலத்தில் இயங்கும் Silvercorp USA என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் Jordan Goudreau என்பவர் வாடகைக்கு அமர்த்தியதாக கூறி உள்ளனர். தமது பணி 50 வேனேசுவேலா நாட்டவர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்குவதே என்றுள்ளனர்.
.
1961 ஆம் ஆண்டு CIA கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோ ஆட்சியை கவிழ்க்க 1,400 உறுப்பினர்களுடன் Bay of Pigs மூலம் நுழைந்து, காஸ்ரோவின் படைகளால் முறியடிக்கப்பட்டு இருந்தனர்.
.