Canary அருகே அகதிகள் வள்ளம் கவிழ்ந்து 52 பேர் பலி

Canary அருகே அகதிகள் வள்ளம் கவிழ்ந்து 52 பேர் பலி

ஆபிரிக்காவில் இருந்து 53 அகதிகளை ஏற்றி சென்ற சிறு வள்ளம் (dinghy) ஒன்று கவிழ்ந்ததால் 52 பேர் பலியாகி உள்ளனர். முப்பது வயதுடைய பெண் ஒருவர் மட்டுமே தப்பி உள்ளார். இந்த விபத்து ஸ்பானிஸ் நாட்டுக்கு உரிய Canary Island என்ற தீவில் இருந்து 220 km தூரத்து கடலில் நிகழ்ந்துள்ளது.

அவ்வழியே சென்ற வர்த்தக கப்பல் ஒன்று வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்பெயின் படைகள் தேடுதல் செய்துள்ளனர். அப்படையினரே உயிருடன் இருந்த 30 வயது பெண்ணை வியாழக்கிழமை மீட்டு உள்ளனர். அப்பொழுது அக்கடல் பகுதியில் பாதகமான காலநிலை இருந்ததாக கூறப்படுகிறது.

தப்பியவரின் தகவலின்படி அனைவரும் Ivory Coast (Cote d’Ivoire) நாட்டில் இருந்து பயணித்து உள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் குறைந்தது 250 அகதிகள் இந்த கடல் பகுதியில் பலியாகி உள்ளனர். இதே காலத்தில் சுமார் 7,500 அகதிகள் இப்பகுதியால் சென்று ஐரோப்பாவை அடைந்து உள்ளனர். 2020ம் ஆண்டில் இப்பகுதியால் பயணித்த 850 அகதிகள் கடலுக்கு பலியாகி இருந்தனர்.